ராமநாதபுரம்:
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் 15, 52,761 வாக்காளர்கள் உள்ளனர். என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வீரராகவ ராவ் கூறினார். லோக்சபா பொதுத் தேர்தல்-2019 தொடர்பான இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பை யடுத்து,தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ.வீர ராகவ ராவ் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர் சுருக்கத் திருத்தம்-2019 அடிப்படையில் இறுதி வாக்காளர்
பட்டியல் ஜன.31 அன்று வெளியிடப் பட்டது. இதன்படி மாவட்டத்தில் 784 இடங்களில் 5,60,173 ஆண் வாக்காளர்கள் 5,62,347 பெண் வாக்காளர்கள் 69 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 11,22,589 வாக்காளர்களாக உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 9,226 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக வாக்காளர் பட்டியலில் தனி குறியீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 1,09,092 ஆண் வாக்காளர்கள், 1,10,296 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் உட்பட 2 ,19,390 வாக்காளர்கள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 1,03,771 ஆண் வாக்காளர்கள், 1,07,000 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 11 உட்பட 2,10,728 வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி ராமநாதபுரம் லோக் சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஜன.31 ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி 1,916 வாக்குச்சாவடி மையங்கள் 7,73,036 ஆண் வாக்காளர்கள், 7,79,643 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 82 பேர் என 15,52,761 வாக்காளர்கள் உள்ளனர். ஜன.31 முதல் தற்போது வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைப் படி லோக் சபா பொதுத் தேர்தல்-2019-க்கான இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பொறுத்தவரை வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் வரப் பெற்று கடந்த 2018 அக்.3 முதல் அக்.10 வரை முதல் நிலை சரி பார்ப்பு நடத்தப்பட்டு ராமநாதபுரம் வேளாண்ம ஒழுங்குமுறை விற்பனைக் கூட கிட்டங்கியில் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் இருப்பில் வைக்கப் பட்டுள்ளது.
தற்பொழுது இந்திய தேர்தல் ஆணையத்தால் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை இயந்திரம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டு அனைத்தும் 09.03.2019 முதல் முதனிலை சரிபார்த்தல் நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2019-ல் பயன்படுத்தவுள்ளது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி கடந்த 09.02.2019 முதல் 13.02.2019 வரை குறித்து விழிப்புணர்வு முகாம்களுக்காக இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலிருந்து எடுக்கப் பட்டுள்ளது. அதில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்காக நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 28 குழுக்களுக்கு வழங்கப் பட்டது. மீதமுள்ளவை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. லோக் சபா தேர்தல் பணிக்கு சட்டமன்ற தொகுதிக்கு தலா மூன்று பறக்கும் படை வீதம் 12 குழுக்கள், சட்டமன்ற தொகுதிக்குள் தலா ஒன்று வீதம் அமைக்கப் பட்டுள்ளது. லோக் சபா தேர்தலுக்காக 17 நியமனம் செய்யப்பட்டு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தேர்தல் தொடர்பாக பொது மக்களின் குறைகள், சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தொடங்கிய கட்டணமில்லா சேவை எண் 1950க்கு இதுவரை 780 அழைப்புகள் வரப் பெற்று குறைகள் நிவர்த்தி செய்யப் பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் ஏப்.18 ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அறிவிக்கப் பட்டுள்ளது. மார்ச் 19 முதல் மார்ச் 26 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் . மார்ச் 27ல் மனுக்கள் பரிசீலனை, மார்ச் 29 வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் கும். ஏப்.18 ல் வாக்குப்பதிவு, மே 23ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணைய அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு விளக்க மளிக்கப் பட்டது என்றார்.
மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணபிரான், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன், மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ககயல்விழி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எஸ்.எஸ்.சேக் அப்துல்லா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.