சென்னை, ஜன. 7 –
ஒரு தொழு நோயாளி துணை இல்லாது மரணித்த தருணம் .. அந்த உடலை ஒருவரும் ஒரு கணம் திரும்பிப் பார்க்கக்கூட துணியாத நிலையில், விடி வெள்ளியாய் அன்றே மிளிர தொடங்கியது ஒரு சிறுமங்கையின் சேவை.. அந்நிகழ்வே இன்றுவரை தோழமை உணர்வோடு ஒட்டு மொத்த தொழு நோயளிக்கும் துணை நின்று சேவையாற்றிட தந்து விட்டு சென்ற புள்ளியின் துவக்கம் என சொல்லலாம்…
ஆம், 40 ஆண்டுகளுக்கு முன்பு , தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமக குளத்தின் படிக்கட்டில் யாரும் அப்போது எண்ணிப் பார்த்துயிருக்க மாட்டார்கள், ஈவு மனப்பான்மை கொண்ட அச்சிறுமியின் நடவடிக்கையை .. ஆடையின்றி, அவலத்துடன் யாரும் கேட்பாரின்றி முதிர்வு நிலை கொண்டவரின் உயிரற்ற உடல் .. அக்கம் பக்கம் யாருமில்லை ஏன் என கேட்க யாருமில்லை, தொழு நோய் கொண்ட உடலை தொட யாரும் தயராக இல்லை, துணிந்தால் .. சிறு மங்கை அவலத்தை மறைக்க மேலாடையை எடுத்து போர்த்தினால் அந்த தோழமை மனம் கொண்டு அந்நோயளியின் இறந்த உடலின் மீது, ஓவென்று அழத்தான் தோன்றிருக்கும் மற்றொரு சிறு மங்கை பார்த்திருந்தால் ஆனால் எந்தவித அருவெறுப்பும் கொள்ளாது, உழைக்கும் வர்க்கமாம் ஒரு ரிக்சா கூலித் தொழிலாளியின் துணையோடு அச்சடலத்தை அள்ளி ரிக்சாவில் போட்டு மயானம் நோக்கி சென்றார் அவ்வுடலை நல்லடக்கம் செய்ய .. அங்கேயும் இனம், பணம் என பழுத்து பாழாய் போயிருக்கும் சமுதாயத்தின் அவலநிலை .. அசராமல் அடுத்த இடம் தேடி சென்று அடக்கம் செய்த சிறு மங்கையின் சேவை மனப்பான்மைக்கு அன்றே அஸ்த்திவாரம் போட்டது அச்செயல் அதனால்தான் இன்று மாசற்ற அன்பினால் அனைத்து தொழு நோயளிகளுக்கும் தனது வாழ்வை அர்பணித்து சேவையாற்றி வரும் அருள் மங்கை மருத்துவர் ரேணுகா ராமகிருஷ்ணன் அவர்களின் மருத்துவத் தொண்டு ..
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் சரும நோய் மருத்துவப்படிப்பை முடித்து விட்டு ஓராண்டு காலம் மருத்துவர்கள் இல்லாத பல்வேறு கிராம பகுதிகளில் இலவச மருத்துவ சேவைப் பணியை முடித்து விட்டு தொழுநோய்களுக்கான மருத்துவ சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்ட அவர் அதில் தங்க மெடலும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு, சென்னை செயிண்ட் தாமஸ் தொழுநோய் மையத்தில் பணியாற்ற தொடங்கினார். அன்று முதல் இன்று வரை சமூதாயத்தில் புறக்கணிக்கப்படும் தொழுநோயளிகளுக்கு தோழமை உணர்வுடன் மருத்துவ சேவை பணியாற்றி வரும் மற்றுமொரு அன்னை தெரசா எனலாம் என்கிறார்கள் தொழுநோய் பாதிப்புக்கு ஆளாகி இவரிடம் சிகிச்சை பெறும் பயனாளிகள். மேலும் தனது மருத்துவ கல்லூரி மாணவ பருவத்திலயே ஓய்வு கிடைக்கும் காலக்கட்டத்தில் பல்வேறு நோய்களுக்கு மலைக் கிராமங்களில் மருத்துவ சேவைகள் புரிந்து அதில் ஈட்டும் வருமானத்தைக் கொண்டு தொழுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மற்றும் மருந்துக்களை வழங்கி வந்ததையும் நினைவூட்டினார். மருத்துவர் திருமதி ரேணுகா ராமகிருஷ்ணன்.
மேலும், அவர் தொடர்ந்து கூறுகையில் காலம் வேகமாகத்தான் சுழலுகிறது ஆம் தனது திருமணம் நிச்சயிக்கப்பட்ட காலத்தில் தனக்கு சிறு அச்சம் எழத் தொடங்கியது ஏனெனில் திருமணத்திற்கு பின் தொழு நோயாளிகளுக்கான தனது மருத்துவ சேவைக்கு கணவர் வீட்டில் இருந்து தடை ஏதும் வருமோ என எண்ணினேன். அதனால் கணவர் மற்றும் அவர்கள் வீட்டில் தனக்கு திருமணத்திற்கு பின் எனது மருத்துவ பணிக்கு தடையேதும் விதிக்கக் கூடாது என தெரிவித்து அதற்கு அவர்களிடம் சம்மதம் பெற்று எங்கள் திருமணம் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து தனது கணவரும் எனது இச்சேவைப் பணிக்கு நல்லாதரவு அளித்து வருகிறார். என்றார் திருமணத்திற்கு பின் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிராமத்தில் அவரது சேவை தொடர்ந்து நடைப்பெற்று வந்தது.
இன்று வரை தனது அயராத உழைப்பினாலும் தோழமை உணர்வு கொண்டு மருத்துவ சேவையாற்றிடும் மருத்துவர் திருமதி ரேணுகா ராமகிருஷ்ணன் தொழு நோயாளிகளுக்கு அவர் ஆற்றி வரும் சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசின் சார்பில் இவருக்கு விருதுகள் வழங்கிவுள்ளனர். மேலும், பல்வேறு தொண்டு நிறுவனங்களோடு எண்ணிலடங்கா இலவச முகாம்களையும் நடத்தி தனக்கான சமூதாய பொறுப்பினை பல்வேறு காலகட்டங்களில் வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாது சமீப காலங்களில் உலகையே அச்சுருத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய் பரவல் காலக்கட்டங்களில் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார இழப்புக்களை எதிர்கொண்டு வரும் ஏழை எளியோர்களின் துயர் துடைக்கும் விதமாக மருத்துவம் மற்றும் வீட்டிற்கு தேவையான் சமையல் பொருட்கள் உள்ளிட்ட நலவுதவிகளையும் வழங்கி சமூகத்தின் மீதான தனது அன்பினை வெளிப்படுத்திக் கொண்டே.. வற்றாத, தனது உடல் உழைப்பினால் விரைந்து செயல்படும் இவரது சேவை இடைவிடாது தொடரவும் தொழு நோயாளிகளின் இன்னல்கள் தீரவும் இனிதே நாமும் வாழ்த்துவோம் மருத்துவர் திருமதி ரேணுகா ராமகிருஷ்ணன் அவர்களை …
தம்பட்டம் நாளேட்டின் அறிவோம் ஆயிரம் … பகுதிக்காக
செய்தி தொகுப்பு : எஸ்.ஹரிகிருஷ்ணன்
























