கடலூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் பாரதி குமார்
கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப் புலியூர் அரசு உதவி பெறும் பள்ளியில் பல்வேறு அரசு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் அந் நிகழ்ச்சியில் தாட்கோ மூலம் வாடகை கார் இயக்குவதற்கு மானிய விலையில் நிதி உதவி வழங்கப்பட்டது. அப்போது அந்த காரின் எண் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுக் குறித்து தாட்கோ அதிகாரியிடம், தமிழ்நாட்டில் வசிப்பவர் போக்குவரத்து துறைக்கு சாலை வரி செலுத்தாமல் குறைந்த வரி உள்ள புதுச்சேரியில் வாகனப் பதிவு செய்துள்ளார் இந்நிலையில் அந்த வாகனத்திற்கு எப்படி தமிழ்நாட்டில் தாட்கோ மானியத்துடன் கூடிய நிதி வழங்கினீர்கள் என அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் அதற்கு அரசின் வழிகாட்டுதல் ஏதும் இல்லையா எனவும் கேள்வி எழுப்பினர். அதற்கு நேரடியாக பதில் கூற முடியாமல் ஏதேதோ கதைகளை கூறி அந்த அதிகாரி மழுப்பலான பதில்களை தெரிவித்து சமாளித்தார் அதுக்குறித்து அரசு உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.























