திருவாரூர், ஏப். 20 –

திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அதன் சமுக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 13.7 இலட்சம் மதிப்பீட்டில் 750 ச.அடியில் இருக்கை வசதியுடன் கூடிய வகுப்பறை மற்றும் கழிப்பறை வசதிகள் அடங்கிய கட்டிடத்தினை புலிவலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைத்து தந்துள்ளனர்.

மேலும் அதன் திறப்பு விழா இன்று அப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்து பங்கேற்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அப்புதிய பள்ளிக் கட்டடத்தை  திறந்து வைத்தார். மேலும் தொடர்ந்து ஆட்சியர் சிறப்பு குழந்தைகளின் பயிற்சி பற்றியும், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அக்குழந்தைகளுக்கு பயிற்சி அளித்திடும் ஆசிரியர்களிடம் இங்கு பயிற்சி பெற்ற அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் மற்ற பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு அவர்களின் கல்விக்கற்கும் தரத்தினை மேம்படுத்திட வேண்டுமென அப்போது ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து அனைத்துக் குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். மேலும் புதிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அப்பள்ளியின் பெருமைப் பற்றி எடுத்துரைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா மற்றும் ஓ.என்.ஜி.சி. குழும பொதுமேலாளர் மாறன் முன்னிலை வகித்தனர். திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் ஏ.தேவா தலைமை தாங்கினார்.

மேலும் இவ்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சௌந்தரராஜன் (தொ.நி) நன்றியுரை நிகழ்த்தினார். ஓ.என்.ஜி.சி.குழும பொது மேலாளர் மாறன் உரைநிகழ்த்தும் போது இம்மாதிரி பள்ளிகள் கட்டியதில் எங்கள் நிறுவனம் உன்மையிலேயே பெருமை கொள்வதாகவும், மேலும், இவ்வாய்ப்பினை வழங்கிய அனைவருக்கும் தமது நிறுவனத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும், .சமுக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பெரும் சேவைகளை செய்து வருவதாகவும், மேலும் மேலும் இதுப்போன்ற சமுக பணிகளை தாங்கள் செய்ய இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

மேலும், மீண்டும் ஒருமுறை மாவட்டம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திற்கும், பள்ளி கல்வித்துறைக்கும் தங்கள் நிறுவனம் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் நக்கீரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, சுப்ரமனியன், ஓ.என்.ஜி.சி பொதுமேலாளர் சரவணன், பிரபாகரன், சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி விஜய்கண்ணன் முதன்மை பொறியாளர் மாரிநலநாதன், ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் புலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் தவுலத் இக்பால், ஊராட்சி துணைத்தலைவர் மக்கள் கார்த்தி கல்வி அலுவலர்கள் இளங்கோவன், செல்வம் மேற்பார்வையாளர் சாந்தி, மாவட்ட மாற்று திறனாளிகள் குழந்தைகள் நல அலுவலர் புவனா, பயிற்சி ஆசிரியர்கள் சாந்தி, மது மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் .பயிற்சி ஆசிரியர்கள் உரை நிகழ்த்தும் போது ஓ.என்.ஜி.சி. குழுமம் இப் பள்ளிக்கட்டிடத்தை சிறந்த முறையில் ஒவ்வொரு நாளும் நேரில் வந்து ஆய்வு செய்து கட்டியதாக பாராட்டினார்கள். மேலும் இக்  கட்டிடத்தை ஓ.என்.ஜி.சி க்காக பாலம் தொண்டு நிறுவனம் செய்திருந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here