பாப்பாநாடு, மே. 25 –

தம்பட்டம் செய்திகளுக்க்காக சாரு…

நாம் அனைவரும் கீரி பாம்பு சண்டை போடுவதாக கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பாப்பாநாடு பகுதியில் உள்ள தோட்டத்தில் நேரடியாக கீரிப் பாம்புக்கு இடையே நடந்த சண்டையின் நேரடிக் காட்சி தற்போது காணலாம்.

தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தேங்கி கிடக்கும் தென்னை மட்டை மீது அமர்ந்திருந்த நல்ல பாம்பு படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் அதனை அப்பகுதி மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடையில் வந்த கீரி ஒன்று பாம்பை எதிர்த்து சண்டை போட தொடங்கியது. சினிமாவில் மட்டுமே பாம்பு கீரி சண்டை பார்த்த மக்களுக்கு நேரடியாக கண்ணெதிரே இரண்டும் சண்டை போட தொடங்கியதும் பொதுமக்கள் கூட்டம் கூடியது கூட்டத்தைக் கண்ட கீரி பயந்து ஓடிவிட்டது. இந்நிலையில் அதனை படம் பிடித்த பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here