திருவாரூர், மார்ச். 19 –

திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்கள் சந்திப்பின் போது, நிலைவை நோக்கி உலகநாடுகள் மீண்டும் செல்வதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் மூலம் அனுப்பட்ட சந்திராயன் 1 விண்கலம் தான் காரணம் என அப்போது அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மேலும் அவர் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திராயன் 1 விண்கலம், நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்ததன் விளைவாகவே தற்பொழுது பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் நாசா மற்றும் சில தனியார் நிறுவனங்கள் மீண்டும் நிலவை நோக்கியப் பயணத்தை மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அப்போது குறிப்பிட்டார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் விண்வெளி ஏவுதளம் அமைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் மேலும் அவ்விண் வெளித்தளம் குலசேகரப்பட்டினம் பகுதியில் கண்டிப்பாக அமையும் எனவும் அப்போது தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை போன்று எரிகலன் மறு பயன்பாடு செய்வதற்கான திட்டங்கள் இரண்டு முறை சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. எனவும், மேலும் இது வருகின்ற ககன்யான் திட்டத்தில் ஆளில்லாமல் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும் செயலிழந்த செயற்கைக்கோளை பூமிக்கு திரும்ப பெற்றதன் மூலம் விண்வெளி குப்பைகளை இந்தியா உருவாக்காது என உலக நாடுகளுக்கு இஸ்ரோ தெரிவித்துள்ளது என அப்போது மேலும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது அப்பள்ளியின் தாளாளர் ஜனகமாலா மற்றும் முதல்வர் மகாலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here