திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருவண்ணாமலை, ஆக.7-

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்க தலைவர் ஜி.வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நெல்பயிருக்கான கடனை திரும்ப செலுத்தும் தவணைக் காலம் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் தருமபுரி கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ளது போன்று,

ஒரு ஆண்டு தவணையில் கடன் வழங்குவதை அமுல்படுத்த வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள கருணை ஓய்வூதியம் வழங்குவதற்கு ஒழுங்குமுறை விதிகள் பதிவு செய்யப்பட்டு கருணை ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டும்.

மத்திய கூட்டுறவு வங்கியில் கணினியில் நடைமுறைப் படுத்தப்படும் சிபிஎஸ்சி முறையினை தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களிலும் பின்பற்றுவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மத்திய கூட்டுறவு தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களிடமிருந்து வருமான வரி பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும்

என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளரும் சங்கத்தின் பொதுச் செயலாளருமான ஏ.உதயகுமார், தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் செயல் தலைவர் எஸ்.கணபதி, பொதுச் செயலாளர் எம்.யுவராஜ், ஓய்வுபெற்ற ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.பத்ராஜலம், சங்கத்தின் துணைத் தலைவர்கள் ஆர்.ஜோதிமணி, என்.குப்புசாமி, வி.சந்தானம், வி.பரசுராமன், செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஜி.சீனுவாசன், ஜி.குணசேகரன், என்.பூபதி, பி.வெங்கடேசன் உள்பட சங்க நிர்வாகிகள் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் எம்.மாசிலாமணி நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here