மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
பல தலை முறைகளாக கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கும் மேலும் சாகுபடி செய்பவர்களுக்கு தங்கு தடை இன்றி மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப் புற கிராமங்களில் உள்ள விளை நிலங்களும் வீட்டுமனை பட்டாக்களும் பெரும்பாலும் ஆதீனங்கள் அறக்கட்டளைகள் மற்றும் கோயில் சொத்துக்களாகவே உள்ளது. அவற்றை பொதுமக்கள் அடிமனை வரியை செலுத்தி பல தலைமுறைகளாக குடியிருந்தும், விவசாயம் செய்தும் வருகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு தடையில்லா சான்று பெறுவதற்கு மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே காத்திருக்கும் அடிமனை வரி செலுத்தி வரும் குடியிருப்போர்க்கும் விவசாயம் செய்பவர்களுக்கும், உடனடியாக தங்கு தடை இன்றி மின்சாரம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அதில் நூற்றுக்கு மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மழக்கங்களை எழுப்பினர். அங்கு வந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது




















