PIC FILE COPY

திருவண்ணாமலை, ஜூலை. 25 –

திருவண்ணாமலையில் இந்து முன்னணி சார்பில் நேற்று நடைப்பெற்ற இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் இரண்டாம் தர குடிமக்களாக இந்துக்கள் பார்க்கப்படுவதை தடுத்திடவும், அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்திடவும் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணத்தை நான் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

மேலும், கடந்த மாதம் 28ந் தேதி திருச்செந்தூரில் தொடங்கிய இந்த பிரச்சார கூட்டம் 37 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிற 31ந் தேதி சென்னையில் நிறைவு பெறுவதாக தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று இந்த பிரச்சார பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதற்காக மாலை 4 மணி அளவில் காந்தி சிலை முன்பிருந்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியத்தை மேளதாளம், வாணவேடிக்கை முழுங்க இந்து முன்னணியினர் ஊர்வலமாக அண்ணாசிலை அருகில் நடைபெற்ற இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சார் பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்து வந்தனர்.

இக்கூட்டத்திற்கான பாதுகாப்பு பணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கூட்டத்தில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் நா.முருகானந்தம், மாநில இணை அமைப்பாளர் குருகுலம் ராஜேஷ், கோட்டத் தலைவர் மகேஷ், கோட்ட அமைப்பாளர் ராஜேஷ்,மாவட்ட பொதுச்செயலாளர் இரா.அருண்குமார், நகரத் தலைவர் நாக.செந்தில் உள்பட முக்கிய நிர்வாகிகள் பேசினர்.

மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் பேசியதாவது,
சர்ச் சொத்து கிறிஸ்தவர்களிடம், மசூதி சொத்து முஸ்லிம்களிடம் இருக்கும் போது கோயில்கள் இந்துக்களிடம் இல்லை, சிதம்பரம் நடராஜரையும் தில்லைக்காளியையும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் இழிவாக பேசி இணையதளத்தில் ஒளிபரப்பு செய்தவர்களை கைது செய்ய கோரி புகார் அளிக்கப்படடுள்ளது. ஆனால் நடராஜரை இழிவுபடுத்தியவர்களை கைது செய்யாமல் திமுக பாதுகாத்து வருகிறது. கோயில் கோயிலாக செல்லும் ஸ்டாலின் மனைவி துர்கா, ஏன் நடராஜரை இழிவு படுத்தியவர்களை கைது செய்ய சொல்லவில்லை? இந்துக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு பணத்தை காட்டி திமுக ஓட்டு வாங்குகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தேர்தலில் போட்டியிட தைரியம் உள்ளதா? திராவிடம் என்பதை வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்தது இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் வந்தவாசி ஆறுமுகம், மாவட்ட செயலாளர்கள் சிவா, சரவணன், கௌதம், ஆரணி.தாமு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here