காஞ்சிபுரம், மே. 22 –

பாமக மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் சமீபத்தில் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் முக்கிய நிர்வாகிகளுடன் 2000 பேர் பாஜகவில் இணைகிறார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாமக மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் கடந்த தேர்தலின் போது சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பளிக்காததைத் தொடர்ந்து தலைமையும் கட்சியினரும் தன்னைப் புறக்கணித்ததாகக் கூறி கடந்த வாரம் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் அவரைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள பிள்ளைபாக்கம் கட்டாராம், பாக்கம், மாம்பாக்கம், திருமங்கலம், எச்சூர், குன்னம், மேட்டுப்பாளையம், சந்தைவேலூர், மொளச்சூர் மற்றும் ஏகனாபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 2000 க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இனைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் கூறுகையில்..

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் பா.ம.க மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட கிழக்கு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த திறமை வாய்ந்த நபருக்கு பதவி மறுக்கப் படுவதாகவும், கட்சியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை எனவும் அக் கட்சியினர் கூறுகின்றனர். ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் பேச்சைக் கேட்டு மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தலைமை முடிவெடுத்து கட்சியை வழிநடத்தி வருவதால் ஆரம்ப காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்த தாங்கள் ஓரங்கட்ட படுவதாலும் அப்பகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள். பாஜக வில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here