
கும்பகோணம், டிச.20 –
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா தமிழகம் முழுவதும் உள்ள 43 டாஸ்மாக் கிடங்கில் பணிப்புரியும் சுமைத்தூக்கும் தொழிலாளர்களின் இறக்கு கூலி மற்றும் சமமான ஏற்றுக்கூலி பிஎஃப், இஎஸ்ஐ, ஹேண்ட்லிங் லாஸ், குடிதண்ணீர் வசதி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருபுவனம் பேரூராட்சியில் உள்ள நாகை மாவட்ட டாஸ்மாக் குடோன் அருகே சிஐடியு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையிலும், மாவட்ட துணைத்தலைவர் ஜீவபாரதி முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.




















