சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய அளவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர்.

அவர்களை கண்காணித்த போலீசார் பிடிக்க முயன்றபோது செல்போனை கீழே போட்டு விட்டு ஓடினர். போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் யானை கவுனியை சேர்ந்த ராஜு, கணேசன் என தெரியவந்தது.

போலீசார் இருவரையும் அழைத்து செல்ல முயன்ற போது திடீரென அதில் ஒருவர் பிளேடால் கையை அறுத்துக் கொண்டதாக தெரிகிறது.

போலீசாரிடம் தப்பி சென்ற இருவரும் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு தனக்கு தானே பிளேடால் வெட்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

எதற்காக அவர்கள் போலீசை பார்த்து பயந்து ஓடினார்கள். ரெயில் நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட வந்தார்களா? என்பது பற்றி சென்ட்ரல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here