பொன்னேரி, மே. 08 –

பொன்னேரி அருகே இன்று பட்டப் பகலில் சொந்த அண்ணனை தம்பி தனது நண்பர்களுடன் சேர்ந்து வயல் வெளியில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு, பொன்னேரி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான சிவக்குமார் (33). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் தமது  தந்தை வீட்டின் வெளியே அமர்ந்து சிவக்குமார் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று சிவக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வந்தவர்களின் நோக்கமறிந்து அங்கிருந்து தப்பிவோட சிவக்குமார் முயன்றுள்ளார். அப்போது அக்கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து வெட்ட முயன்ற போது அவர் மேலும் அங்கிருந்து அருகில் இருந்த வயல்வெளியில் தலைத்தெறிக்க கத்தியப்படி ஓடிவுள்ளார் அவரை விடாது அக்கும்பல் சிவக்குமாரை ஓட ஓட விரட்டி அவர் முகம் முழுவதும் சிதையும் வகையில் வெட்டிக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இதனிடையே சிவக்குமாரின் உடன் பிறந்த தம்பி தேவேந்திரன் (30) என்பவர் பொன்னேரி காவல்நிலையத்தில் சரணடைந்து தமது அண்ணன் சிவக்குமாரை தான்தான் நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொன்றதாகவும், மேலும் அதற்கான காரணமாக அவர் தமது மாமியார் ஜானகியுடன் சிவகுமார் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், அதனை பலமுறை தான் கண்டித்தும் கேட்காததால் நண்பர்களுடன் சேர்ந்து அண்ணனை கொலை செய்ததாக அவர் பொன்னேரி காவல் நிலையத்தில் தனது வாக்கு மூலத்தை அளித்துள்ளார். என காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் வயல் வெளியில் கிடந்த சிவக்குமாரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அக்கொலை குறித்து பொன்னேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர் விசஆரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அக்கொலையில் சம்பந்தப்பட்ட தேவேந்திரன் நண்பர்கள் உள்ளிட்ட கொலையில் ஈடுப்பட்ட குற்றவாளிகள்  சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் அக்கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here