அனைத்து சமுதாய மக்களும் திரண்டு அலங்கரிக்கப்பட்ட 35 அடி உயர சந்தனகூடு தேரினை இழுத்தனர், அடிப்படை வசதிகளை செய்து தந்ததில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் கொண்டு செய்திருந்தது

 

ராமநாதபுரம் , ஜூலை 28-

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி தர்ஹா சந்தனக் கூடு  திருவிழா உலக புகழ்பெற்றது. ஏர்வாடி நல்ல இப்ராகீம் மகாலில் இருந்து தாரை, தப்பட்டை, வாண வேடிக்கை முழங்க 13 குதிரைகள் நாட்டிய மாடிய வாறு செல்ல, ஒரு யானைக்கு முன்பாக சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர். 35 அடி கூடுதல் உயரத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட சந்தனக்கூடு
தேரினை அனைத்து சமுதாய மக்களும் இழுத்து கொண்டு வந்தனர். தர்ஹாவில் நுழைந்தவுடன் நாரேதக்பீர் அல்லாஹ்அக்பர் என்ற கோசங்கள் விண்ணை முட்ட சந்தனகூடு திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. சந்தனகூடு திருவிழாவை காண தமிழகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களிலிருந்தும் வெளிநாடு களிலிருந்தும் லட்சகணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து சந்தன கூடு திருவிழாவை கண்டு வணங்கி சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் அல் குத்பு சுல்தான் செய்யிது இப்ராஹிம்  ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா 845 ஆம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா நடத்தப்படும் ஏர்வாடி பாதுஷா நாயகம் சந்தனக் கூடு விழாவில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் முஸ்லிம்க் உட்பட  லட்சகணக்கானோர் சந்தனகூடு கொடி ஏற்று விழா மற்றும் சந்தனக்கூடு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏர்வாடி வருகின்றனர்.
இந்தாண்டு விழா ஜூலை 4 ஆம் தேதி பாதுஷா நாயகத்தின் மவுலீது ( புகழ் மாலை) உடன் விழா தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து, தர்ஹா வளாகத்தில்  ( ஜூலை 13 ) முன் தினம் மாலை அடி மரம் ஏற்றப்பட்டது.  (  ஜூலை 14 ) மாலை 4 மணியளவில் மேள, தாளம் முழங்க யானை, குதிரை முன் செல்ல அலங்கரிக்கப் பட்ட கூடு ஏராளமான மக்கள் பின் தொடர ஊர்வலமாக தர்கா வந்தடைந்தது. தர்காவில் நுழைந்த போது தர்காவில் கூடியிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நாரேதக்பீர் அல்லாஹ் அக்பர் என கோஷங்கள் விண்ணை முட்டும் அளவு குரல் எழுப்ப, குதிரை மற்றும் யானை மற்றும் அனைத்து சமுதாயத்தினர் தர்காவை மூன்று முறை சுற்றிவலம் வந்தனர். சரியாக இரவு 7:40 மணியளவில் ஊர்வலமாக வந்த யானையின் மடியில் இருந்த கொடி தர்கா நிர்வாக கமிட்டியிடம் கொடுக்க கொடிகம்பத்தில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனகூடு திருவிழா ஜூலை 26 ஆம் தேதி மாலையில் தொடங்கியது.

ஏர்வாடி சந்தனக் கூடு திருவிழா:

 

ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. 845ம் ஆண்டு சந்தனக்கூட்டிற்கான மவுலீது எனும் புகழ்மாலை ஜூலை 4 அன்று மாலை (வியாழன்) 6:30 மணியளவில் தொடங்கியது. ஜூலை 13 அன்று அடிமரம் ஊன்றப்பட்டும், ஜூலை 14 மறுநாள் மாலை கொடி ஊர்வலமும், கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. (ஜூலை 26) நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணிவரை பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை (மவுலீது) ஓதப்பட்டது. நேற்று (ஜூலை 27) அதிகாலை 4 மணியளவில் ஏர்வாடி நல்ல இப்ராகீம் மகாலில் இருந்து தாரை, தப்பட்டை, வாண வேடிக்கை முழங்க 13 குதிரைகள் நாட்டியமாடியவாறு செல்ல, ஒரு யானைக்கு முன்பாக சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர். 35 அடி கூடுதல் உயரத்துடன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு  தேரினை ஜாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களும் இழுத்து கொண்டு வந்தனர்.
அதிகாலை 5:00 மணியளவில் பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை, மல்லிகை சரத்துடன் போர்த்தப்பட்டது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்றனர்.  இதன் தொடர் நிகழ்வாக புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
உலக புகழபெற்ற சந்தனகூடு திருவிழா என்பதால் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தனிகவனம் செலுத்தினார். மாவட்ட முகமை திட்ட இயக்குனர் ஹெட்சிலீமா அமாலினி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜமால் முகம்மது, ஏர்வாடி ஊராட்சி செயலாளர் அஜ்மல்கான் மற்றும் ஊழியர்கள் குடிநீர் வசதி, சுகாதார வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகளில் தனிகவனம் செலுத்தி விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்திருந்தனர் . ஏர்வாடி ஊராட்சி சார்பில் ஆஙகாங்கே குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்காலிக கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. விழா நடைபெறு நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி நேரில் வந்து கண்காணித்தார். விழாவில்பங்கேற்ற பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு உதவிகளையும் மற்ற தரிசன உதவிகளையும், பக்தர்கள் ஏதேனும் தவறவிடப்பட்ட பொருட்கள், குழந்தைகள் குறித்து தர்கா ஹக்தார் கமிட்டி அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் தெரிவித்தனர்.
விழா ஏற்பாடுகளையும் ஏர்வாடி தர்ஹா ஹக்தார் பொதுக்குழு   செய்து இருந்தனர். ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை எஸ்பி ஓம்பிரகாஷ்மீனா தலைமையில் ஆயிரகணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுககு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏர்வாடி தர்ஹா ஹக்தார்கள் பொது மகா சபையினர் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து இருந்தனர். மருத்துவ துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here