தேனி பங்களா மேட்டில் நாடு முழுவதும் தொடரும் ஆணவக் கொலைகளை தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், அதனை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப் பெற்றது.
தேனி ; ஜூலை, தேனிமாவட்டம் பங்களா மேட்டில் நாடு முழுவதும் தொடரும் ஆணவப் படுகொலைகளை கண்டித்தும், அதனை தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட (கி) மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் தலைமை தாங்க, மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி முன்னிலை வகிக்க, நூற்றுக்கனக்கான கட்சி தொண்டர்கள் கலந்துக்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காதல் திருமணங்கள் செய்யும் இளைஞர் மற்றும் பெண்களையும் ஆணவ படுகொலைகள் செய்பவரை தடுக்காமலும், இந் நிகழ்வுகளை கண்டிக்காமல் இருக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.ஆதி மொழி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார், இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி செயலாளர் இரா.தமிழ்வாணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய ,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனார்.