ராமநாதபுரம், ஆக. 14- ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகளின் சார்பாக உலக தாய்பால் வாரவிழா நடைப் பெற்றது. விழாவில் முன்னதாக நடத்தப் பட்ட ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட குழந்தை களுக்கு  மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ்  பரிசு வழங்கினார்.
விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மதுலம் பச்சிளம் குழந்தைகள் கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 454 ஒருங்கிணந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம் மையங்கள் மூலம் கருவுற்ற தாய்மார்களை கணக் கெடுத்தல், அவர்களின் உடல் ஆரோக் கியத்திற்கான ஊட்டச்சத்து மருந்துகள், மாத்திரைகள் வழங்குதல், பச்சிளம் குழந்தைகளின் நலனை பாதுகாத்தல் போன்ற பல்வேறு நட வடிக்ககைகள் செயல் படுத்தப் பட்டு வருகின்றன. அந்த வகையில்,  பச்சிளம் குழந்தைகளுக்க தாய்பால் வழங்குவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக ஆண்டு தோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரையிலான நாட்களை உலக தாய்ப்பால் வார விழாவாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்பால் வழங்குவதின் அவசியத்தினை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டன. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் அதிகப் படியான வளர்ச்சி யானது முதல் வருடத்தில் ஏற் படுகின்றது. இக் காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் வழங்கிட வேண்டும். பிறந்த குழந்தைளின் நல்வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் தாய்ப் பாலில் மட்டுமே இருக்கின்றன. குழந்தை பிறந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் வழங்குவதன் மூலம் குழந்தையினை  உடல் ஆரோக்கியம் மேற் படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் தாய்பால் வழங்குவது தாய்மார்களின் உடல் நலத்திற்கும் நன்மை பயக்கும். அதே போல, பாரத பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தக் கூடிய மாவட்டங் களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று என்ற அடிப்படையில், பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை முக்கிய காரணியாக கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடு குறித்து கணக்கிடப் பட்டும் கண் காணிக்கப் பட்டு வருகிறது. போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் பச்சிளம் குழந்தைகள் கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார். முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார் களின் நலனுக் காக ஆரோக்கிய உணவு பழக்க வழக்கங்கள் குறித்து அமைக்கப் பட்டிருந்த விழிப் புணர்வு கண் காட்சியினை பார்வை யிட்டார். தொடர்ந்து உலக தாய்ப் பால் வார விழா வினை முன்னிட்டு நடத்தப் பட்ட ஆரோக்கிய குழந்தைக் கான போட்டி மற்றும் கல்லுாரி மாணவ மாணவியர் களுக்கான கட்டுரை மற்றும் கவிதை போட்டி களில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, சேதுபதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் மகுதம்மாள், ராமநாதபுரம் வட்டார மருத்துவ அலுவலர்கள் மகேஷ்வரி, புதுமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயற்கை மற்றும் யோகா மருத்துவர் ஷர்மிளா உட்பட பலர் பங்கேற்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here