கும்பகோணம், டிச. 13 –

தஞ்சைமாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, சோழபுரத்தில் இன்று காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் சோழபுரம் ஜிஎஸ்டி மஹாலில் நடைபெற்றது.

இம்மனுநீதி முகாமில் திருவிடைமருதூர்,  திருப்பனந்தாள், பந்தநல்லூர், திருநீலக்குடி, நாச்சியார் கோவில், உள்ளிட்ட 6 காவல் நிலையங்களில் முடிக்கப்படாத மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

இம்மனுநீதி முகாமில் ஆய்வாளர்கள் ராஜேஷ், ரேகாராணி,  மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் சிறப்பு உதவியாளர் தலைமை காவலர்கள் என திரளான காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

காவல் நிலையங்களில் பல நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக நடைப்பெற்ற மனுக்கள் மீதான சிறப்பு முகாமில் நிலப்பிரச்சினை, வழிதடப் பிரச்சினை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, குடும்பப் பிரச்சினை, முன் விரோத பிரச்சனை, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. முடியாத மனுக்கள் மீது நீதிமன்றம் செல்ல வழிவகை செய்யப்பட்டது. தொடர்ந்து முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் விசாரணைக்கு பின், 53 புகார் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here