பொன்னேரி, ஜூன். 14 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் இன்று அங்குள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, மாணவிகளிடம் உரையாற்றிய நகராட்சித் தலைவர் பரிமலம் எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டுதலாக விளங்கும் மாதா பிதா குரு ஆகியோரை போற்றி தெய்வத்துக்கு நிகராக மதிக்க வேண்டும் எனவும், அவர்களின் சொல்கேட்டு நல்வழியில் நடந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்றும் கூறிய அவர் மாணவிகள் பள்ளிக்குள் வரும் பொழுது நாள்தோறும் கட்டாயம் ஒரு திருக்குறளை வாசிக்க வேண்டும் என்றும், இதனை தொடர்ந்து கடைபிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 1300 திருக்குறளும் மனப்பாடம் ஆகும் எனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்களின் திறன் குறித்து கேட்டறிந்தார் பின்னர் மாணவர்கள் தங்களது திறமையை மேம்படுத்திக்கொள்ள தேவையான விளையாட்டு உபகரணங்கள், மற்றும் பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை உதவிகளையும் செய்துத் தர தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.
இந்த ஆய்வின் போது நகரமன்ற உறுப்பினர்கள் உமாபதி, தனுஷ் தமிழ் குடிமகன், மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆனந்த் ஈஸ்வரி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி, உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ், மற்றும் வாசுதேவன், ராமலிங்கம், ஆகியோரும் உடன் இருந்தனர்.






















