மாங்காடு, ஏப். 08 –
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்திய மீண்டும் மஞ்சப்பை திட்டம் தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைப்பெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதி கோயில் நகரமாக விளங்குவதால் தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதை தடுக்கும் வகையிலும், முற்றிலும். ஒருமுறை பயன்பட்த்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் விதமாக முதல்வரின் மீண்டும் மஞ்சப்பை திட்ட விழிப்புணர்வு பேரணியை மாங்காடு நகராட்சி சார்பில் நடத்தப்பட்டது.
இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் மஞ்சள் பையை கையில் வைத்தபடி பேரணியாக நடந்து சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மேலும், கடைகளில் பொருட்களை வாங்கி வந்த வாடிக்கையாளர்களுக்கு கடை உரிமையாளர்கள் பாலித்தீன் பைகளில் பொருட்களை கொடுக்காமல் மஞ்சப்பையில் பொருட்களை போட்டு கொடுக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தி பொருட்களை மஞ்சப்பையில் போட்டு கொடுத்து அனுப்பினார்கள்.
கோயில் நகரமாக விளங்கும் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முற்றிலுமாக மஞ்சள் பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதில் நகரமன்ற தலைவர் சுமதி முருகன், கமிஷனர் சுமா ஆகியோர் கலந்து கொண்டனர்.





















