மன்னார்குடி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்…
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் கேஸ் சிலிண்டரின் விலை ரூ 450 ஆக இருந்தது. தற்போது கேஸ் சிலிண்டர் விலை ரூ 1,200 ரூபாய். இந்த 10 ஆண்டுகளில் கேஸ் விலையை உயர்த்தியது ஒன்றிய பிரதமர் மோடிதான். தற்போது தேர்தல் வந்துள்ளதால் உங்களுக்கு பரிசு கொடுத்திருக்கிறார் எவ்வளவு தெரியுமா 100 ரூபாய். எனவும் ஆனால் அவர் ஏற்றியது 800 ரூபாய். எனத் தெரிவித்த அவர் மீண்டும் அவரிடம் ஏமாந்து விடுவீர்களா என அக்கூட்டத்தில் கேள்வியெழிப்பினார்.
ஆனால் நமது தலைவர் ஸ்டாலின் தற்போது வாக்குறுதி கொடுத்துள்ளார் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் விலை 500 ரூபாய்க்கு தருவேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். அதேபோல் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு தருவேன் என்று கூறியுள்ளார். அதே போல் ஒரு லிட்டர் டீசல் 65 ரூபாய்க்கு தருவேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார் எனவும் அதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்குதானே எனக் அவர் கேள்வியெழுப்ப அனைவரும் இருக்கு இருக்கு என பதிலளித்தனர்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். இவை அனைத்தும் நடக்க வேண்டும் என்றால் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நீங்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அப்போது அக்கூட்டத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு உங்களால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் நமது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். யாருடைய காலிலும் விழுந்தோ, தவழ்ந்து போயோ அவர் முதலமைச்சர் ஆனவர் அல்ல எனவும், மேலும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்த படத்தை பொதுமக்களிடம் காட்டி இப்படி உலகத்திலேயே முதலமைச்சரான ஒரு ஜென்மத்தை பாத்திருக்கீங்களா? கொஞ்சம் கூட வெட்கம் மானம் , சூடு , சொரணை இல்லாம சசிகலாவின் காலை பிடித்து முதலமைச்சராகி அதை இப்ப பெருமையாவும் சொல்லியிருக்கிறார்.
இப்ப அந்த அம்மா காலையே வாரி விட்டவர்தான் பாதம் தாங்கி பழனிச்சாமி. சசிகலா அம்மாவிற்கு மட்டும் துரோகம் பண்ணவில்லை. ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கே துரோகம் பண்ணியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசோட கூட்டணி வச்சுக்கிட்டு தமிழ்நாட்டு மாநில உரிமைகள் அத்தனையும் அடகு வைத்து விட்டார் என அப்போது அவர் தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முதலமைச்சர் ஸ்டாலின். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூபாய் 1,000, புதுமைப்பெண் திட்டம் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1,000, பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இப்படி எண்ணற்ற திட்டங்களை வாக்குறுதிகளாக கொடுத்து நிறைவேற்றியவர் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த காலை உணவுத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் தற்போது பின்பற்றியுள்ளது. குறிப்பாக சமீபத்தில் கனடா நாட்டு பிரதமர் பாராட்டி தற்போது அங்கு இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி இதுதான் நமது அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் விண்ணப்பித்தது ஒரு கோடியே 60 லட்சம் பேர். மீதம் உள்ளவர்களுக்கும் பரிசீலனை செய்து நிச்சயமாக மகளிர் உரிமைத்தொகை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குவார். மேலும் நீங்கள் எல்லோரும் இனி ஒன்றிய பிரதமரை மிஸ்டர் 29 பைசா என்று அழைக்க வேண்டும் என்றார்.
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கு மூன்று ஆண்டுகளாக செய்த சாதனை பாதாள சாக்கடை திட்டம் ரூ 151 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மன்னார்குடி புறவழி சாலை அமைக்கும் பணிக்கு ரூ 351 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ரூ 170 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கி பணிகள் நடைபெற்றுநு வருகிறது மன்னார்குடியில் புதிய பேருந்து நிலையம் ரூ 45 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது இதை விரைவில் தமிழக முதல்வர் திறந்து வைப்பார் கிராமப்புற சாலைகள் ரூ 60 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில் தீர்க்கப்படாத இருந்த நில உரிமை பட்டா 750 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஸ்டாலின் பஸ் திட்டத்தின் கீழ் ரூ 3 கோடியே 7ஆயிரம் பயணங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்ற அவர் திமுக , காங்கிரஸ் மதசார்பற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்யிடுகிறோம்.
அதைபோல பாஜக கூட்டணி அமைத்து பேட்டியிடுகின்றனர் ஆனால் அதிமுக யாருடன் கூட்டணி வைத்திருக்கிறது அவர்களுக்கும் தெரியவில்லை யாருக்கும் தெரியவில்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சி வருகிறது செல்கிறது நேற்று எடப்பாடி கேட்கிறார் இன்னும் குழந்தையே பிறக்கவில்லை அதற்குள்ளாக ஏன் பெயர் வைக்கவேண்டும் யார் உங்களுடைய பிரதமர் வேட்பாளர் என கேட்கிறார்.
நான் திருப்பி கேட்டால் உங்களால் பதில் சொல்லமுடியுமா ? அவர்கள் பிரதமர் வேட்பாளர் மோடி என சொல்லுவார் வேறு யார் பெயரையாவது சொல்லுவுவதற்கு தைரியம் இருக்கிறதா எங்களுக்காவது குழந்தைதான் பிறக்கவில்லை உங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை . எனவும் மேலும் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இருப்பது கள்ளகாதல் என தெரிவித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
பொதுமக்களாகிய நீங்கள் கூறியதை நம்பி நானும் உங்கள் அமைச்சர் டி.ஆர்.பிராஜவும் வேட்பாளருக்கு வெற்றிமாலை அணிவித்து விடே்டோம் இனி நீங்கள்தான் வெற்றிமாலையை வெற்றி வாக்குகளாக மாற்றவேண்டியது உங்கள் கடமை என்றார் மன்னார்குடி திமுகவினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மலர்மாலை அணிவித்து வீரவாள் பரிசளித்தனர்.