திருவண்ணாமலை, ஜன. 1-

திருவண்ணாமலையில் 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கபடி கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் 68வது மாநில அளவிலான பெண்கள் கபடி சாப்பியன்ஷிப் போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளியன்று மாலை தொடங்கியது.

இதற்கான விழாவுக்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக பொது மேலாளர் ஏ.சபியுல்லா தலைமை தாங்கினார். மாவட்ட கபடி கழக மாவட்ட தலைவர் வி.பவன்குமார் முன்னிலை வகிக்க மாவட்ட கபடி கழக செயலாளர் ஆர்.ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார். தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று போட்டியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், செயலாளர் கே.புகழேந்தி, மண்டல முதுநிலை மேலாளர் சி.டி.பெரியகருப்பன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி நீலகிரி தென்காசி உள்பட 35 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. முடிவில் மாவட்ட கபடி கழக இணை செயலாளர் எம்.ரமேஷ் நன்றி கூறினார்.

2வது நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் தலைவர் சோலை எம்.ராஜா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட கைப்பந்து கழக சேர்மன் இரா.ஸ்ரீதரன், மாவட்ட கைபந்து கழக தலைவர் டி.அரவிந்தகுமார், மாவட்ட கபடி கழக துணைத் தலைவர் ஜி.நல்லதம்பி, இணை செயலாளர் எம்.அன்பழகன் என்கின்ற வெங்கட்ராமன், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன், ஏவிஎஸ்எஸ் பாஸ்ட் கோல்டு புட் நிறுவன தலைவர் டி.பி.ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இப்போட்டி 3 நாட்கள் தொட்ந்து நடைபெறவுள்ளது. தினமும் மாலை 3 மணியளவில் தொடங்கி இரவு 9 மணிவரை நடைபெறவுள்ளது. இதன் நிறைவு விழா நாளை (2ந் தேதி) நடைபெறவுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here