சென்னை, செப் . 21 –
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சார்ந்த பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளின் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை வேளாண்மைக்காக தண்ணீர் திறந்து விடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அவ்வறிவிப்பில் பின் வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த 10 அமரவதி பழைய வாய்க்கால்களின் ( அலங்கியல் முதல் கரூர் வலது கரை வரை ) பாசனப் பகுதிகளில் சம்பா, சாகுபடிக்காக அமரவதி ஆற்று மதகு வழியாக 4536.00 மி.க.அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களின் சம்பா சாகுபடிக்காக அமரவதி பிரதான கால்வாய் வழியாக 2661.00 மி.க.அடிக்கு மிகாமலும், ஆக மொத்தம் 7197.00 மி.க.அடிக்கு மிகாமல் நேற்று முதல் எதிர் வரும் பிப் 2-2022 வரை 135 நாட்களில் 70 நாட்கள் தண்ணீர் திறப்பும் 65 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில் அமரவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.