இராமநாதபுரம்; நவ.13-
முதலமைச்சரின் உத்திரவின் பேரில், வேளாண்மை பாசனத்திற்கு வைகை நீர்தேக்கத்தில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் நேற்று இராமநாதபுரம் பார்த்திபனூர் மதகணைக்கு வந்தடைந்ததை அடுத்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் முனியசாமி, ஆகியோர்
மலர் தூவி வரவேற்று, பார்த்திபனூர் மதகணையிலிருந்து இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீரை திறந்து விட்டனர்.





















