தஞ்சை, ஜூலை. 07 –
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய திமுக செயலாளர் தியாக சுரேஷ்குமார், சகோதரர் தியாக அன்பழகன் நிர்மலா ஆகியோரின் புதல்வர் அன்பு சூரியதேவா, சுகன்யா ஆகியோரின் திருமணவிழா அம்மாபேட்டை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, திமுக தஞ்சை வடக்கு மாவட்டசெயலாளர் கல்யாணசுந்தரம் எம்பி தலைமை வகிக்க, பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தலைமையில், தியாக சுரேஷ் மற்றும் சகோதரர் தியாக அன்பழகன் நிர்மலா இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார்.
விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, அரசு கொறடா கோவி.செழியன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், நீலமேகம், மனிதநேய மக்கள்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர். விழாவில் அனைத்து கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட திரளான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.





















