திருவள்ளூர் ஏப்ரல் -7
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வினா ஸ்ரீ யோகா பயிற்சி பள்ளியை சேர்ந்த இருபத்தி ஆறு மாணவர்கள் டெல்லி யோகா ஹெல்த்கேர் இன்ஸ்டியூட் மற்றும் சென்னை மீனாட்சி யூனிவர்சிட்டி இணைந்து ஆன்லைன் மூலம் 5 முதல் 70 வயது வரை ஆண் பெண் இருபாலரும் பங்கேற்ற ரதா சப்தமி (சூர்ய பூஜை) உலக யோகா போட்டியில் பங்கேற்றனர்.
கனடா, சீனா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து 2100 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்த வினா ஸ்ரீ யோகா பயிற்சி பள்ளியை சேர்ந்த 26 மாணவர்களும் உலக சாதனை படைத்து “நோபல் புக் ஆப் ரெக்கார்ட்” புத்தகத்தில் இடம பிடித்தனர்.
இவர்களுக்கு பயிற்சி அளித்த காளத்தீஸ்வரன், அர்ச்சனா வித்யா, சங்கீதா ஆகிய யோகா பயிற்சி பள்ளி ஆசியர்களை வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.





















