பழவேற்காடு, டிச. 20 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர்கள் வசிக்கும் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் பழவேற்காடு கடல் பகுதியிலும் தென்படுவதாக   அறிந்ததைத் தொடர்ந்து, பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அவருடன் மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி உள்ளிட்டவர்களும் உடனிருந்தனர். அவர்கள் அனைவரும் கழிவாயில் படர்ந்திருந்த கடல் மற்றும் ஆற்றுப்படுகைகளிளும் ஆய்வு செய்து பின்னர் அப்பகுதி மீனவர்களிடம் அதுக் குறித்து விசாரித்தார்.

மீனவர்கள் அவர்களுக்கு படர்ந்துள்ள ஆயில் கழிவுகளை காண்பித்து அதனால் தங்களின் வாழ்வாதரம் தொடர்ந்து பாதிக்கப்படுவதையும் அவர்களிடம் எடுத்துக்கூறினார்கள்.

மேலும் அப்பிரச்சினைகளையும் கேட்டறிந்த துரை சந்திர சேகர் அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களிடம் உறுதியளித்தார். இந்நிகழ்வில் திரளான கட்சித் தொண்டர்கள், மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here