நெல்லை, அக். 29 –
உலக நன்மைக்காக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பாக தன்வந்திர் மற்றும் சண்டி ஹோமம் நெல்லை மாவட்டம் கொண்டா நகரத்தில் ரயில்வே கேட் அருகில் உள்ள ஸ்ரீ வீர விஜய சாய்பாபா ஆலயத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைப்பெற்றது.
தமிழகத்தில் உள்ள 1008 திருக்கோயில்களில் தொடர் தன்வந்திரி யாகம் மற்றும் சண்டி ஹோமம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இவ் யாகத்தால் உலக அமைதி மற்றும் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா நோய்தொற்று விலகவும், மற்றும் இந்து மக்கள் நடத்தி வரும் தொழில் ;நிறுவனங்கள் மேன்மையடையுவும், திருக்கோயில்கள் ஆக்கிரமப்புகளை தடுத்திடவும் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இன்று தெல்லை கொண்டா நகரம் ரயில்வே கேட் அருகில் உள்ள ஸ்ரீ வீர விஜய சாய்பாபா ஆலயத்தில் நடைப்பெற்ற இவ் யாகம் மற்றும் ஹோமத்திற்கு அவ் வியக்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் பி.சுந்தர் தலைமை தாங்க வரவேற்புரையை நெ.மா.பொதுச்செயலாளர் பி.கண்ணன் மற்றும் நெ..மா.செயலாளர் வி.முத்து ஏற்றனர்.
இ.முத்துகுமார், தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் சி.பரதன் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சி. ஜெயகுமார், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி.யுவராஜ், திருப்பூர் மாவட்ட தலைவர் எம். ரவிச்சந்திரன், நீலகிரி மாவட்ட தலைவர் பி. யோகேஸ்வரன், விருதுநகர் மாவட்ட தலைவர் ஆர்.வெங்கடேஷ், எம்.சண்முலிங்கம், பி.லட்சுமணன், எஸ்.கே.சங்கர் ஈரோடு மாவட்ட இளைஞர் அணி து.செயலாளர் வி.ராம்குமார், சென்னைக்கோட்ட போதுச்செயலாளர் கே.எஆஃ.ஏழுமலை, அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. பன்னீர்செல்வம், திருப்பூர் மாவட்ட இளைஞர் மாவட்ட அணி தலைவர் எஸ்.அருண்பிரசாத், திண்டுக்கல் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.செல்லபாண்டியன், செங்கல்பட்டு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ். இராமலிங்கம், செங்கல்பட்டு மாவட்ட இளைசர் அணி தலைவர் ஆர்.பிரகாஷ், காஞ்சி மாவட்டதலைவர் எஸ்.விநாயகமூர்த்தி, ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் வி.முருகேசன், மாநில பொதுச்செயலாளர் ஏ. கமலக்கண்ணன், இந்து சேனை மாநிலத்தலைவர் எம்.ரகு, செங்கல்பட்டு மாவட்ட து.தலைவர் கே.சிகாமணி ஆகியோர் இந் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
இந்த யாகத்தையும் ஹோமத்தையும் ஸ்ரீ வஜ்ஜிரகிரி மகான் வடபாதி சித்தர், பூபேஸ் நாகராஜன், ஸ்ரீ வஜ்ஜிரகிரி வடிவேலன் கிரிவல குழு தலைவர் பிரிங்கிமலை மு.சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரிங்கி கி. இராமசுப்பிரமணி, மாநில சட்ட ஆலோசகர் வி.சக்திவேல் எம்.ஏ.பி.எல்., மாநிலத் தலைவர் திருச்சி ஏ.பி.நடராஜன், மாநில செயலாளர் என்.பிரகாஷ்குமார், மாநிலத்தலைவர் எம்.பஞ்சாட்சரம், மாநில பொருளாளர் பி.சி. ஆனந்தன், மாநில பொதுச்செயலாளர் பா.இ.தி.கூ. தவத்திரு ஆர். முருகன்ஜி, ஜெய் சிவசேனா மாநில இ.அ.தலைவர் பி. கார்த்திக், மாநில செயலாளர் அன்பகம் பி. வீரமணி மாநிலத்தலைவர் ஆர்.செல்வி ஆகியோர் யாகத்தை வழி நடத்தினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட ஜெய் சிவசேனா செய்திருந்தது. இந் நிகழ்ச்சியில் ஏராளமான அப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.