கும்பகோணம், ஏப். 28
கும்பகோணம் அருகேவுள்ள கோவிலாச்சேரி அன்னை கல்வியியல் பாத்திமா கல்லூரியின் 10வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைப்பெற்றது. இதில் 526 மாணவ, மாணவிகளுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியல் துறை பேராசிரியர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.
கும்பகோணத்தை அடுத்து கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கல்வியியல் கல்லூரி மற்றும் அன்னை பாத்திமா கல்வியியல் கல்லூரியில் 10வது பட்டமளிப்பு விழா அன்னை கல்வி குழுமத்தின் தாளாளர் அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கல்வியியல் துறை பேராசிரியர் முனைவர் வி.அம்பேத்கர் கலந்துகொண்டு பேசியபோது
மாணவப்பருவம் மகத்தானப் பருவம், கவலையின்றி நமது விருப்பம் போல் வாழும் பருவம். இருந்த போதிலும் அடுத்த இலக்கு என்ன? என்பதை அறிந்து மாணவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நமது பெற்றோரின் பெயரைச் சொல்லி நம்மை அறிமுகம் செய்து வைக்கும் நிலைக்கு நாம் உயர்ந்தோமானால் அதுவே நமது பெற்றோருக்கு நாம் செய்யும் பெரும் பேராகும்’ என்று மாணவர்களிடையே பேருரையாற்றினார்.
நிகழ்ச்சியில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் சுபாஷ் அன்னை கல்வியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சண்முகநாதன், அன்னை பாத்திமா கல்வியல் கல்லூரி முதல்வர் முனைவர் முத்துச்சாமி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை கல்வியியல் முடித்த 526 பட்டதாரி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களைப் வழங்கினார்கள்.






















