எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையாது எனவும், மேலும் இந்தியா கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், காங்கிரஸ் தனித்து 220 இடங்களை பிடிக்கும் மேலும் தென்னாட்டின் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது எனவும் தஞ்சையை சேர்ந்த பிரபல அரசியல் ஜோதிடர் சபரி முத்து ஆருடம் கணித்து தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சபரி முத்து என்கிற பகவான் இவர் பல்வேறு ஜோதிட நூல்கள் குறித்தும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் பற்றியும் ஆய்வு செய்து இருப்பதாக தெரிவிக்கப் படுகிறது.
மேலும் அவர் கடந்த 26 ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவர் அரசியல் ஜோதிடர் என அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறார்.
கடந்த காலங்களில் நடந்து உள்ள சட்டமன்றம், நாடாளுமன்றம் தேர்தல் உள்ளாட்சி தேர்தல்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா தேர்தல் குறித்து ஜோதிடர் சபரி முத்து கணித்து கூறியது 100 சதவீதம் நடந்துள்ளதாகவும் பரவலாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும். யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்தும் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க வின் ஜாதகம். ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஜாதகம் இவற்றை ஆய்வு செய்து கணித்துள்ளதாக கூறும் ஜோதிடர் சபரி முத்து பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை எனவும், மேலும் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர்தான் எதிர்கால இந்தியாவின் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது எனவும் அவர் கூறிவுள்ளார்.





















