ஆவடி, மே. 01 –

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பாக்கம் கிராமசபை கூட்டத்தில்  அரசு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் பொதுமக்களால் ஈடுப்பட்டதால், அங்கு பரபரப்பு சிறிது நேரம் நிலவியது

ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கிராமத்தில் கிராம சபை பொதுக்கூட்டம். இன்று  நடைபெற்றது.  இதில் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேலு, மற்றும் திருவள்ளூர் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், பாக்கம் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்,

இதில் பங்கேற்ற பொதுமக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது குறித்த முறையான தகவல் பொது மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை எனவும், அதனால்தான் பொதுமக்களின் வருகை எனவும் புகார் தெரிவித்தனர்.

மேலும் பாக்கம் ஊராட்சியில் கிளார்க்  இதுவரை நியமிக்கவில்லை எனவும், 100 நாள் வேலைவாய்ப்பு பணிபுரிய கட்டாயம் தண்ணீர் வரி செலுத்த வேண்டும்  என பாக்கம் ஊராட்சி அலுவகத்தில் கூறப்படுவதாகும் கூறி அரசு அதிகாரிகள் மற்றும் தலைவரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாக்கம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை இல்லை எனவும் இப்பகுதிக்கு தேவையான குடிநீர் வசதி சாலை வசதி, தெரு மின்விளக்கு, குப்பைத் தொட்டிகள் எதுவும் இல்லை, குறுகிய வீடுகள் உள்ள பகுதியில் 10 லட்சம் செலவு செய்து சாலைகள் வசதி ஏற்படுத்தியது ஏனென சரமாரியாக கேள்விகள் எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here