பாடி, மே. 01 –
பாடி மதியழகன் நகரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் 30 வது ஆண்டு விழா மாணவ, மாணவிகளின் கலை நிகழ்சிகளுடன் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழிலதிபர் காஸ்டிங் பாபு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
சென்னை அம்பத்தூர் அருகேவுள்ள பாடி மஞ்சக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் 30 ம் வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் அதே பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் சமூக ஆர்வலருமான காஸ்டிங் பாபு கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் உள்ள தொடக்க பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கு படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பல லட்சம் மதிப்பீட்டில் தனது சொந்த செலவில் செய்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஆண்டு விழாவையும் தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.
அப்பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கு மாதம் ஒருவருக்கு 200 ரூபாய் வீதம் அவர்களது வங்கி கணக்கில் பணத்தை அவரது வங்கி கணக்கிலிருந்து நேரடியாக பரிமாற்றம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் கோடைகால ஆரம்பத்திலிருந்து பள்ளி குழந்தைகளுக்கு தினமும் சத்து நிறைந்த பழங்களை வழங்கி வருகிறார்.
இந்நிகழ்வில் அங்கு பயிலும் குழந்தைகளின் துள்ளலான ஆடல் பாடல் மற்றும் நாடக நிகழ்ச்சிகளும் அரங்கேறியது இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியற்கு காஸ்டிங் பாபு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசு தொகையையும் வழங்கினார்.
இந்நிகழ்சியின் சிறப்பு அழைப்பாளராக 87 வது வார்டு மாமன்ற உறுப்பினர் A.P. பூர்ணிமா, திருமதி பங்கஜம் பாபு மற்றும் அதே பள்ளியில் பயின்று வரும் சிறுவர் சிறுமியர் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.