காஞ்சிபுரம், டிச.01 –

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து மொத்தம் 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் வளர்ச்சி நலப்பணிகளுக்கு பூமி பூஜை செய்ய்யப்பட்டது. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் பங்கேற்று துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கிழ்அம்பி ஊராட்சியில் மழைநீர் வடிக்கால் கால்வாய் கட்டும் பணிக்காக மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து 15  லட்சம் ரூபாய் மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு பூமி பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர் க.செல்வம் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எஸ்.நித்யா சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர், எம்.எஸ்.சுகுமார், ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜசேகர், காஞ்சி வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, ஒன்றிய துணை செயலாளர்கள் இளஞ்செழியன், ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பி.என்.ரவி, கருணாகரன், ஒன்றிய கவுன்சிலர் ராம்பிரசாத், மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த ராஜசேகர், பிரகாஷ், புண்ணியக்கோடி, கூரம் மேஷாக், விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி, வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here