மீஞ்சூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி….
திருவள்ளூர் மாவட்டம், வடக்காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளின் வைகாசி தேரோடும் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 22 கருட சேவை நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சூரிய பிரபை சந்திர பிரபை என அலங்கரிக்கப்பட்டு எம்பெருமான் சிம்ம வாகனம், கருட வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
10 நாளான 26 ஆம் தேதியான இன்று தேரோடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் நகர திமுக செயலாளர் தமிழ் உதயன், பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், அதிமுக ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், வழக்கறிஞர் மாரி, நகர செயலாளர் பட்டாபிராமன், நகர துணை செயலாளர் தமிழரசன்,உள்ளிட்ட பலர் வடம் பிடிக்க சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் தேரே இழுத்தனர்.
திருத் தேரானது மீஞ்சூரின் முக்கிய மாட வீதிகளின் வழியாக வளம் வந்து சரியாக 12 மணி அளவில் அடியை சேர்ந்தது. பொது மக்களின் பாதுகாப்பு கருதி நூற்றுக்கணக்கான போலீசார் அஇவ்விழாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.