பூவிருந்தவல்லி, மே. 14

பூவிருந்தவல்லி வெளியூர் செல்லும் பேருந்து நிலையத்தில் நிழற்குடை மற்றும் குடிநீர் இல்லாததால் அங்கு வரும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு, மாதவரம், சானடோரியம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது பூந்தமல்லியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளுக்காக குமனன்சாவடி இருந்து பூந்தமல்லி வரை அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை மாநகர பேருந்துகளும் தற்காலிக பஸ் நிலையம் வழியாக சென்று வருவதால் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு போதிய அளவு நிழற்குடை இல்லாததாலும் கோடை காலத்தில் தண்ணீர் வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த பகுதியில் தண்ணீர் டேங்குகள் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன நகராட்சி அதிகாரிகள் இதுவரை செவிசாய்க்காமல் இருந்து வருதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here