காஞ்சிபுரம், மார்ச். 21 –

காஞ்சிபுரம் நகராட்சியில் இருந்து பெருநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தி நகர்ப்புற தேர்தலையும் தமிழக அரசு நடத்தி முடித்துள்ளது.

இந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக வெற்றி பெற்றார் இதனை தொடர்ந்து இன்று முதல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டு மக்களும் தங்கள் குறைகளை நேரடியாக மேயரிடம் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மனுக்களை பெற்று மேயர் மகாலட்சுமி துவக்கி வைத்தார். இம்முகாம் ஒவ்வொரு வாரமும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளிலேயே இன்று காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி போன்ற கோரிக்கைகள் உள்ளடங்கிய மனுக்களை மேயர் மகாலட்சுமியிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட மேயர் உடனே கையெப்பமிட்டு இந்த மனுக்களுக்கான தீர்வுகளை உடனே எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் துணை மேயர் குமேரகுருநாதன் மற்றும் மாநகராட்சி உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here