தஞ்சாவூர், மார்ச். 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை பள்ளி மாணவ, மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில்  6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வி மாணாக்கர்களுக்கு, ரோபோட்டிக் தொழில் நுட்பம் பயிற்சி வழங்கப்பட்டு அதில் பயிற்சி நிறைவுப் பெற்ற 917 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கும் விழா நடைப்பெற்றது அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேயர் சண். இராமநாதன் மாணாக்கர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகம் சார்பில் ரோபோட்டிக் தொழில் நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவ துறையில் துல்லிய அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் பயன்பாடு வந்து விட்டதால் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்து வரும் கிராமபுற மாணவ, மாணவிகள் 917 பேருக்கு ஒரு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முடித்த அனைவருக்கும்  தஞ்சை மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கி பாராட்டினார். பின்னர் நிகழ்வில் பேசிய மேயர், ஒரு காலத்தில பெற்றோர் சொல்வதை  குழந்தைகள் கேட்க வேண்டும் என்ற காலம் மாறி குழந்தைகள் சொல்வதை கேட்கும் பெற்றோர்களாக இருக்கிறார்கள்

காரணம் வாட்சப், முகநூல், எக்ஸ் தளம், இன்ஸ்டா என அனைத்தையும் தெரிந்து வைத்துள்ள நீங்கள அவற்றை உங்கள் தந்தை உங்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்கிறார் என்றார். மேலும் நான் சிறு பிள்ளையாக இருந்த போது TV ஆண்டனாவை பார்த்து காக்கா, குருவி சுடுவதற்கு வைத்து இருக்கிறார்கள் என நண்பர்களோடு பேசி கொள்வோம்.

ஆனால் இன்று தொழில் நுட்பம் உங்களோடு இருப்பதால் நீங்கள அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து உள்ளது என்றார் தஞ்சாவூர் மான்ற மேயர். இராமநாதன்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here