தஞ்சாவூர், மே. 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே  திருவையாறு – கல்லணை பிரதான சாலை அமைந்துள்ளது. மேலும் அது திருவையாறு,  கல்லணை,  உலக புகழ் பெற்ற பூண்டி மாதா கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களின் பிரதான சாலையாகும்.

இந்நிலையில் அச்சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இங்கு பார் வசதி இல்லாததால் மது வாங்கும் மதுப்ரியர்கள், குடிக்க இடமில்லாமல், மதுபானக் கடைக்குள் உள்ள காலி இடத்தில் மது அருந்தி வருகின்றனர்.

ஆனால் பகல் நேரங்களில் கூட்டமாக சாலையில் அமர்ந்து மது  அருந்துவதால்,  அவ்வழியாகச் செல்ல  கூடிய வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தற்போது  திருவையாறு -கல்லணை சாலையில் அமர்ந்து திறந்தவெளி மது  குடிக்கும் காடசி சமூக வலைத்தளத்தில் வைலாகி வருகிறது. மேலும், அங்கு மது அருந்துவதை காவல் துறையினர் தடுக்க வேண்டும் என பெண்கள் மற்றும் அப்பகுதி வாழ் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here