திருவண்ணாமலை செப்.1-
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், உடையானந்தல் கிராமத்தை சேர்ந்த ராயர், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு சட்டம் பிரிவு 5-ன் கீழ் எதிர்மனுதாரர்களுக்கு எதிராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டு திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மேற்படி மனு 21.09.2020 அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேற்படி உத்தரவின் மீது மேல்முறையீடு மனு ஒன்றினை இம்மாவட்ட தீர்ப்பாயத்திற்கு ராயர் என்பவர் 16.08.2021 அன்று தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் மனுதாரர் ராயர் என்பவர் தனது தந்தை மேற்படி கணேச கோனாருக்கு தானும் தனது தம்பி சேதுராமனும் வாரிசுகள் ஆவோம். தங்களுக்கு தலா 5.50 சென்ட் நிலம் தனது தந்தை கணேச கோனார் எழுதிய தானசெட்டில்மென்ட் மூலம் எங்களுக்கு பாத்தியமாக இருந்து வந்தது.
இதில் தனது மகள்கள் சக்திதேவி, சசிதேவி இருவருக்கும் தலா 0.50 சென்ட் மற்றும் சசிதேவியின் மகன் விவேக் என்பவருக்கு 0.50 சென்ட், பின்பு சசிதேவியின் மகள் விவிமா என்பவருக்கு 0.33 சென்ட் நிலமும், தனது மகன் ஹரிதாஸ் என்பவருக்கு 3.66 சென்ட் நிலமும் எழுதி வைத்ததாகவும், இந்நிலையில் மேற்படி சொத்தை பெற்றுக்கொண்டு தனது மனைவியும் மகனும் பராமரிப்பதில்லை எனவும், தான் தற்சமயம் தனது தாயுடன் அவரது நிலத்தல் உள்ள கொட்டகையில் வசித்து வருவதாகவும் தெரிவித்து, தான் தானசெட்டில்மென்ட்டாக எழுதி கொடுத்த ஆவணத்தை ரத்து செய்து தருமாறு கோரியுள்ளார்.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு சட்டம் பிரிவு 16(1)-ன் கீழ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்ட இந்நேர்வில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973-ல் மாவட்ட நிர்வாக நடுவருக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மனுதாரர் அளித்த மனுவின் பேரில் விசாரணைகள் மேற் கொள்ளப்படும் நிமித்தமாக 17.08.2021 தேதியன்று மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் விசாரிக்கப்பட்டனர்.
மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் ஆகியோர் நேரில் வாய்மொழி சாட்சியங்களை அளித்தனர். மனுதாரரின் வாய்மொழி சாட்சியம் சாண்றாவணம்-1 ஆகவும், எதிர்மனுதாரர்களின் வாய்மொழி சாட்சியம் சான்றாவணம்-2 ஆகவும், பதிவு ஆவணம்-3 ஆகவும் பதிவு செய்யப்பட்டன. மனுதாரர் கொடுத்த மனு மற்றும் எதிர்மனுதாரர்களின் வாய்மொழி சாட்சியம் மற்றும் சாட்சியங்களால் நேரடியாக தெரிவிக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் ஆவண ஆதாரங்கள் அனைத்தும் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், உடையானந்தல் கிராமத்தை சேர்ந்த ராயர் மேற்காணும் கிராமத்தில் நிலையாக வசித்து வருகிறேன். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு சட்டம்; கீழ் வருவாய் கோட்ட அலுவலர், திருவண்ணாமலை அவர்கள் வழங்கிய உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை அவர்களிடம் மேல்முறையீடு மனு செய்தது தொடர்பாக நேற்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விசாரணை என்பதை தெரிந்து கொண்டேன்.
மாவட்ட ஆட்சியர் கடந்த 17ந்தேதி மாலை 5 மணியளவில் என்னை நேரில் விசாரணை செய்தார். எனக்கு தென்மாத்தூர் கிராமத்தில் 5.5 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. எனது மகன் ஹரிதாஸ் என்பவருக்கு 3.66 ஏக்கர் எழுதி கொடுத்து இருந்தேன் அதில் புல என் 111/3ஏ- 0.82.0 ஏர்ஸ் புலத்தை மட்டும் எனது மகனுக்கு எழுதி கொடுத்ததை இரத்து செய்தும் என் பெயருக்கு மேற்காணும் புலத்தை மாற்றும் செய்யுமாறும், எனது மகன் ஹரிதாஸ் வயிற்றுப் பிள்ளையான எனது பேரப்பிள்ளைக்கு ஆவணம் 2963/2019 நாள் 25.09.2019 அதில் உள்ள 111/3ஏ 0.82.0 ஏர்ஸ் மட்டும் இரத்து செய்த 30 நாட்களுக்குள் எனது மகன் வழி பேரனுக்கு என் முழு மனதுடன், சுய நினைவுடன் யாருடைய தூண்டுதலுமின்றி எடுதி வைக்க சம்மதிக்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இதை உயிலாக எழுதி அதன் நகலை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கிறேன். இதை நான் யாருடைய தூண்டுதலுமன்றி என்னுடைய சுயநினைவுடன் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கலசபாக்கம் வட்டம், மேல் சோழாங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் மாணிக்கம் என்பவர் தனது மகன்களுக்கு தானமாக எழுதிக் கொடுத்த (1.காத்தவராயன் 2சங்கர்) சொத்துகளை தங்களை பராமரிக்காததால் அவர்களுக்கு எழுதி கொடுத்த தானசெட்டில்மென்ட் பத்திர ஆவணத்தை ரத்து செய்து தன் பெயருக்கு கிரையம் செய்யக்கோரி பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல்வாழ்வு சட்டம் 2007 உட்பிரிவு(1) பிரிவு 23-ன் கீழ் 20.08.2021 அன்று மனு அளித்திருந்தார். மேற்படி கிராம புல எண்கள் 212/3எ1, 212/3சி3எ-ல் 1.50 ஏக்கர் நிலம் மற்றும் மேல்சோழங்குப்பம் கிராம நத்தம் புல எண் 381/13 0.0291 ச.மீ மற்றும் 381/38 0.0087ச.மீ ஆகியவற்றை நிறுத்திக் கொண்டும், மேற்படி புன்செய் புல எண் 212/3எ1 நிலத்தில் இரண்டு சிமெண்ட் ஷீட் போட்ட வீடுகளில் தனது மகன்கள் வசித்து வந்தனர் எனவும், அதன் அருகில் சாலை ஓரமாக குடிசை அமைத்து நானும் தனது மனைவியும் தனியாக வசித்து வருகிறோம் எனவும், அதன் பின்பு தனது மகன்கள் இருவரும் சுமார் 5 மாதங்களுக்கு முன்பு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து வேண்டும் என பொய்யாக கூறி தன்னை ஏமாற்றி கடலாடி சார்பதியாளர் அலுவலத்தில் 2021ஆம் ஆண்டு நாள்.08.02.2021 அன்று கீழ்க்கண்ட சொத்துகளை எழுதியுள்ளனர் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்படி தானசெட்டில்மென்ட் பத்திரம் எழுதி வாங்கி கொண்ட பிறகு அதுவரை வீட்டின் அருகில் குடியிருந்து எங்களுக்கு குறைந்தபட்ச பராமரிப்பு செய்து வந்த மகன்கள் சொத்துக்களை எழுதி வாங்கிய பிறகு சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள 2018-ல் நான் எழுதிக் கொடுத்த நிலத்திற்கு நிரந்தரமாக குடியேறி விட்டனர். எனவும், அதன் பிறகு தங்களுக்கு எந்தவித பராமரிப்பும் செய்வதில்லை எனவும், தங்களுக்கு எவ்வித உணவு உடை மற்றும் இருப்பிட வசதி மருத்துவத்திற்கும் உதவி செய்வதில்லை எனவும், மேலும் சொத்தை ஏமாற்றி பெற்றுக்கொண்டது குறித்து கேட்டால் தன்னையும் தனது மனைவியையும் இளைய மகன் சங்கர் என்பவர் குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசியும், மரக்கட்டை மற்றும் கற்களால் அடிப்பதாக மிரட்டி வருகிறார் எனவும் தற்போது எங்களுக்கு எவ்வித ஆதரவும் இல்லை எனவும், தான் மேற்கண்ட ஆவணங்களின்படி 2018-ம் ஆண்டு மற்றும் 2021-ம் ஆண்ட தானசெட்டில்மென்ட் செய்து கொடுத்த சொத்துகளை திரும்பவும் தனது பெயருக்கு மாற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும், மேற்படி சொத்துகளை தனது மகன்கள் அனுபவித்துக் கொள்ள எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேற்படி, மாணிக்கம் என்பவரின் மனுவினை தொடர்ந்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல்வாழ்வு சட்டம் 2007 பிரிவு 5 உட்பிரிவு 3-ன்படி மனுதாரர் மாணிக்கம் மகன்கள் காத்தவராயன், சங்கர் ஆகியோரை மேற்படி சட்டப்பிரிவின்படி அமைக்கப்பட்டுள்ள பராமரிப்பு தீர்ப்பாயத்தின் விசாரனைக்கு கடந்த 23ந்தேதியன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விசாரனைக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. தான் மேற்படி முகவரியில் வசித்து வருவதாகவும், தனக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர் எனவும், மேற்படி வாரிசுதார்கள் அனைவருக்கும் திருமணம் முடித்து வைத்து தனித்தனியாக வசித்து வருகின்றார்கள் எனவும், தான் சுயமாக கிரையும் பெற்ற சொத்துக்களில் மேல்சோழங்குப்பம் கிராம புன்செய் புல எண்கள்: 106/1, 110/6, 106/4, 212/3சி3பி ஆகியவற்றில் சுமார் 3 ஏக்கர் நிலத்தை தனது மகன்களான 1காத்தவராயன் 2.சங்கர் ஆகியோருக்கு கடலாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2018ம் ஆண்டு நாள் : 05.03.2018 ஆண்டு தானசெட்டில் மெண்ட் பக்கிரம் சொத்துக்களை கொடுத்துள்ளாதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மனுதாரரின் மேற்படி மனுவினை பரிசீலினை செய்து நேற்று மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பிள்ளைகளுக்கு எழுதிக்கொடுத்த சொத்துப் பத்திரம் ரத்து செய்யப்பட்டு பெற்றோர்கள் பெயரில் மீண்டும் பட்டா வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, வருவாய் கோட்டாட்சியர் ஆரணி இரா.க.கவிதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் உடன் இருந்தனர்.