திருவாரூர், டிச. 15 –

திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிரபல வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரு.1.20 இலட்சம் மதிப்பிலான புதிய எல்.இ.டி டிவி வழங்கிடும் படியாகவும் நேற்று அதிரடி உத்தரவினை வழங்கிவுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மேல திருப்பாலங்குடி பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் கடந்த 30.5.2002 அன்று மன்னார்குடி பெரிய கடைத்தெருவில் உள்ள டார்லிங் டி.வி.சி எலக்ட்ரானிக்ஸ் கடையில் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள சாம்சங் எல்இடி டிவியை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் மூலம் 20 மாதம் தவணை காலத் தவணை முறையில் வாங்கிவுள்ளார்.

மேலும் பிரியா 17 மாதம் வரை தவணைத் தொகையை முறையாக செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் 17 வது மாதத்தில் தொலைக்காட்சி பெட்டியின் டிஸ்ப்ளே பழுதாகிவிட்டது. இது தொடர்பாக டிவி வாங்கிய டார்லிங் நிறுவனத்தை பிரியா நேரில் அணுகியபோது டிஸ்ப்ளே சரி செய்து தர ஐம்பதாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். புதிதாக வாங்கிய டிவிக்கு வாரண்டி மற்றும் கேரன்டி இருக்கும் நிலையில் இன்னும் தவணைக்காலம் கூட முடியாத நிலையில் எதற்காக மேலும் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என பிரியா கேட்டுள்ளார். அதற்கு டார்லிங் நிறுவனத்தினர் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும், ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே டிவியை சரி செய்து தரப்படும் எனவும் கூறியுள்ளனர்.

அதனால் மன உளைச்சலுக்குள்ளான பிரியா அப்பிரச்சினைத் தொடர்பாக திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை தீர விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சேகர் பாதிக்கப்பட்ட மனுதாரரான ப்ரியாவிற்கு 1,20,000 ரூபாய் மதிப்பிலான அதே மாடல் கொண்ட புதிய சாம்சங் டிவியை  மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும், வாரன்டி மற்றும் கேரன்டி இருக்கும்  நிலையிலும் பழுதை சரி செய்து தர மறுத்த டார்லிங் நிறுவனத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இவ்வழக்கு தொடர்பான செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாயை கூடுதலாக வழங்க வேண்டும் என்றும், வழக்கு தாக்கலான நாள் முதல் 9% வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் மனுதாரருக்கு தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here