லாஸ்பேட்டை, பிப். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …

புதுச்சேரி மாநிலம், லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்ட இரண்டு நரிக்குறவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து, ஒரு கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, சிறப்பு அதிரடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தபோது, இரண்டு பேர் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிய அவர்களை விரட்டி பிடித்த சிறப்பு அதிரடிப்படை போலீசார், அவர்களிடம் விற்பனைக்கு இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

பின்பு விசாரணை நடத்திய போது அவர்கள் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து புதுச்சேரியில் பொட்டலம் போட்டு விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

மேலும் அவர்களிடம் விற்பனைக்கு இருந்த, ஒரு கிலோ கஞ்சா மற்றும் ரொக்கபணம் 8 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இரண்டு வாலிபர்களை, லாஸ்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்கள் லாஸ்பேட்டை நரிக்குறவர்கள் காலனியை சேர்ந்த செல்வமணி மற்றும் இளவரசன் என்பதும், தற்போது புதுச்சேரியில் கஞ்சா விற்பனையில் அதிக பணம் கிடைப்பதால், கஞ்சா தொழிலில் இறங்கியதாக தெரிவித்தனர்.

அதையடுத்து அவர்களை கைது செய்து அவர்கள் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here