முத்துப்பேட்டை, மே. 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகபதி …

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, சங்கேந்தி ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கூத்த பெருமாள் ஆலய 8 நாள் சித்திரைத் திருவிழா இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைப்பெறுவது வழக்கமாகும்.

அதுப்போன்றே இவ்வாண்டிற்கான அச் சித்திரை திருவிழா கடந்த தமிழ்மாதம் சித்திரை 22 ஆம் தேதி ஆங்கில மாதம் 05 05 2024 அன்று பந்தக்கால் முகூர்த்தம் செய்யப்பட்டு காப்புக் கட்டுதல் அதனைத் தொடர்ந்து சுவாமியின் பல்லக்கு வீதி உலாக் காட்சியும் அதனை தொடர்ந்து அத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான எட்டாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை தீமிதி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மேலும் அப் பூக் குழி இருங்குபவர்கள் காப்புக் கட்டி எட்டு நாள் விரதமிருந்து அப்பூக் குழியில் இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள் அது போல் அதனைக் கடிப்பிடித்து இன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் காவடி எடுத்து தீ மிதி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினார்கள்.

மேலும் இன்று வெகுச்சிறப்பாகவும் மிகுந்த பாதுகாப்புடனும்நடைப்பெற்ற அவ்விழாவில் பங்கேற்றக உள்ளூர் மட்டுமல்லாது சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

மேலும் அவர்கள் அனைவருக்கும் சங்கேந்தி இளைஞர் மன்றம் சார்பாக அன்னதானமும் அம்மனின் அருள் பிரசாதமும் வழங்கி சிறப்பித்தனர். மேலும் அறநிலையத்துறை பொறுப்பு முருகையன் சங்கந்தி கிராமவாசிகளும் அவர்களுக்கு இணையாக பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்து அவ்விழா மிகச் சிறப்பாக நடைப்பெற சிறப்புச் சேர்த்தனர்.  இன்று இரவு சிறப்பான இன்னிசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here