செங்கல்பட்டு, செப். 9 –

 

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணத்தால் தமிழ்நாடு அரசு சமய திருவிழாக்களை பொது இடங்களில் கொண்டாட தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் நாளை வரயிருக்கும் வினாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது.

அதனால் பெரிய அளவில் செங்கல்பட்டு மார்கெட்டுகளில் வினாயகர் சதுர்த்தி விழாவிற்கான பூஜை பொருட்களின் வரத்து மிக குறைவாக உள்ளது. இதனால் விழாக் காலங்களை நம்பி தொழில் நடத்தும் வியாபாரிகள் பெரிய பாதிப்புகளை எதிர் கொள்கின்றனர்.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மார்கெட்டில் பூ, பழங்கள், கரும்பு, வினாயகர் சிலைகள் பொறி, பூசணிக்காய் வரத்து குறைவாகவே உள்ளது நாளை வினாயகர் சதுர்த்தியன்று  பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் கவலையில் உள்ளனர் இதனால் செங்கல்பட்டு மார்கெட் வெறிச்சோடியே காணப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here