திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்டம் மேல்வணக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் அன்பழகன் தலைமையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை முப்படை ராணுவ தளபதி மரியாதைக்குரிய பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகளுக்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
இரங்கல் கூட்டத்தில் ராணுவத் தளபதி சாதனைகளை நினைவு கூர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் பள்ளி மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இதைப்போல் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமையில் ஹெலிகப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ தளபதி மற்றும் அதிகாரிகளுக்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் ஆன்மா சாந்தி அடைய மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.