திருவண்ணாமலை டிச.10-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்முடியனூர் கிராமத்தில் ஆதிபராசக்தி அம்மன் கோவில், மஹா கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ‘ஓம் சக்தி… பராசக்தி’ என, விண்ணதிர முழங்கினர்.
மேல் முடியனூர் ஆதிபராசக்தி அம்மன் திருக்கோயிலில் நவக்கிரஹ ஹோமம் தொடர்ந்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, வேள்விகள் நடத்தபட்டன.பின், புனித நீர், ராஜ கோபுரம், விமான கலசங்கள் மற்றும் கொடி மரத்தில் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பக்தர்கள், ‘ஓம் சக்தி… பராசக்தி’ என, விண்ணதிர முழங்கினர்.பின், பரிவார மூர்த்திகளுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் முடிவுற்று, பக்தர்களுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப் பட்டது.இதில், முடியனுர், முத்தனூர், அம்மாபாளையம் ,கொட்டகுளம் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாக்குழுவினர் மஞ்சுளா பன்னீர், ரத்தினம் பாண்டுரங்கன், ரமணி ரமேஷ்பாபு, சுமதி சேட்டு, சசிகலா சக்திவேல், சின்ன பாப்பா காசி, இளமதி ஆறுமுகம் துளசிமணி சுகந்தி சரவணன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது