திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் அண்ணாமலையார் திருமண மஹாலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைத்தல் குறித்து துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமரசாமி தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை, ஆக.14-

செய்தி சேகரிப்பு ராம மூர்த்தி 

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் அண்ணாமலையார் திருமண மஹாலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைப்பதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை நேற்று (13.08.2021) மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமரசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் 1243 பண்ணை குட்டைகள் அமைப்பதற்கான பணி கடந்த 12.08.2021 அன்று மாவட்ட ஆட்சித்தலைவரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, பண்ணை குட்டைகளை விரைவாகவும், துரிதமாகவும், முடிப்பதற்காக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், வேளாண் துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகிய துறை அலுவலர்களை பணியாளர்களாக கொண்டு அவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் பண்ணை குட்டைகளை அனைத்து பணியாளர்களும் குழுவாக சேர்ந்து 579 பஞ்சாயத்துகளில் பண்ணை குட்டைகளை 09.09.2021க்குள் அமைக்கப்பட வேண்டும். இந்த பண்ணை குட்டைகளை பல்வேறு இடங்களில் அமைக்க வேண்டும். ஒரே இடத்தில் அருகருகே அமைத்தல் கூடாது. பண்ணை குட்டைகளின் நீல, அகல அளவுகளில் கண்டிப்பாக 2:1 என்ற விகிதத்தில் அமைக்கப்பட வேண்டும். பண்ணை குட்டைகளுக்கு சென்று வர பாதுகாப்பான வழித்தடங்களை ஏற்படுத்தப்பட வேண்டும். பண்ணை குட்டைகளை அமைப்பதற்கு பணியாளர்களையும், இயந்திரங்களையும் வாகனங்களையும், உபரகரணங்கள் மற்றும் கருவிகளையும் பாதுகாப்பாகவும், கவனத்துடன் உபயோகித்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு பண்ணைக் குட்டைக்கும் குறைந்தது 50 புகைப்படங்களும், 25 நிமிடங்கள் வீடியோவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பண்ணைக் குட்டைக்கும் பஞ்சாயத்து அல்லது ஊர் பெயர்களுடன் தனித்தனி எண்கள் கொடுத்து, அதனை பண்ணை குட்டைகளின் அருகில் தெளிவாக தெரியும் விதத்தில் காட்சிப்படுத்த வேண்டும். அனைத்து சான்றுகளிலும் அந்த எண்கள் குறிப்பிட்டு இருத்தல் வேண்டும். பண்ணைக் குட்டைகள் குறைந்தது 4,56,493 காலன் (20,75,258 லிட்டர்) மழை நீரினை தேக்கி வைக்கும் அளவுகளில் இருத்தல் வேண்டும்.
ஒவ்வொரு பண்ணை குட்டைக்கும் தனியாக பஞ்சாயத்து செயலாளரை சாதனை நிகழ்விற்கு சான்றளிக்கும் சாட்சியாக நியமித்தல் வேண்டும். பண்ணை குட்டைக்கு தனியாக கிராம நிர்வாக அதிகாரியை சாதனை நிகழ்வின் நேரக்காப்பாளர் என நியமித்தல் வேண்டும். அமைக்கப்பட்ட ஒவ்வொரு பண்ணைக் குட்டைக்கும் உலக சாதனை நிறுவனங்களின் விதிமுறைகள் படியும், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் துணை ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தல் படி மிகச் சரியாக அமைக்கப் பட்டிருக்கிறது என்பதை நேரக்காப்பாளராக இருந்து உறுதி கடிதத்தை கிராம நிர்வாக அலுவலுருக்கு அளிக்க வேண்டும்.  

இந் நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மு.பிரதாப், வேளாண்மை துறை இணை இயக்குநர் முருகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) தணிகாச்சலம்,, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருவண்ணாமலை லட்சுமி நரசிம்மன், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள்; மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here