ராமநாதபுரம், ஆக.14-
செய்தி சேகரிப்பு சிவசங்கரன்
இராமநாதபுரம் அரண்மனையில் திமுக தெற்கு நகர் கழகத்தின் சார்பில் திமுக அரசின் 100 நாட்கள் சாதனையை கொண்டாடும் விதமாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுக கட்சியின் கொடி ஏற்றியும் கொண்டாடினர்.
திமுக அரசு ஆட்சி அமைத்து 100 நாட்களாகிய நிலையில் தலைநிமிரும் தமிழகம்.. பேர் சொல்லும் நூறு நாட்கள் சாதனையை திமுக கட்சியினர் வெற்றி விழாவாக கொண்டாடினர்.
அந்த வகையில் இராமநாதபுரம் தெற்கு நகர் கழக செயலாளர் பிரவின் தங்கம் தலைமையில் கட்சியினர் அரண்மனையில் கட்சி கொடி ஏற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு செய்துள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
தொடர்ந்து பொது மக்களுக்கு நல்லாட்சி கொண்டாட்டமாக இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சேர்மன் பிரபாகரன், தலைமை கழக நிர்வாகி அகம்மது தம்பி, இளைஞரணி செயலாளர் இன்பாரகு உள்ளிட்ட கட்சியினர் பலர் பங்கேற்றனர்.