திருவள்ளூர் செப் 24 :
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம் திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் என்கிற ரிச்சர்ட் (30) இவரது தந்தை ஏழுமலை (75) க்கு சொந்தமாக அதே கிராமத்தில் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. தந்தைக்கு வயது அதிகமாகிக் கொண்டே போவதால் அப்பா பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு ஆன் லைன் மூலம் சிலம்பரசன் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார்.
இது குறித்து திருப்பாச்சூர் கிராம நிர்வாக அலுவலரான திருமால் என்பவரை அணுகியுள்ளார் சிலம்பரசன். அப்போது விசாரணை செய்த வி.ஏ.ஓ திருமால் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிலம்பரசன் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினருக்கு கொடுத்த புகாரின் பேரில் டி.எஸ்.பி கலைச்செல்வன் கொடுத்த ஆலோசனையின் பேரில் ரசாயணம் தடவிய ரூ.5 ஆயிரம் சிம்பரசன் கிராம நிர்வாக அலுவலர் திருமாலிடம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் கையும் களவுமாக கைது செய்து 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.