பட்டுக்கோட்டை, ஏப். 29 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், அவர் இறக்கும் வரை சுமார் 6 கோடி மாணவர்களை நேரில் சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் என பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அப்துல் கலாம் பேரன் நெகிழ்ச்சிவுரை நிகழ்த்தினார்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளூர் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அண்ணன் பேரன் ஷேக் சலீம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும் பொழுது தான் அப்துல் கலாம் அவர்களின் அலுவலகத்தில் அவருடன் சில காலங்கள் பணிபுரிந்துள்ளேன். அவர் ஏராளமான மாணவர்களை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஒருமுறை அவரிடம் மாணவர்களை கான்பரன்ஸ் மூலம் சந்திக்கலாம் என்று கூறியதை அவர் நிராகரித்து ஒவ்வொரு மாணவனுடன் நாம் நேரில் சந்தித்து பேசும்பொழுது எனக்குத் தெரிந்தவற்றை அவர்கள் தெரிந்து கொள்ளவும் அவர்களுக்கு தெரிந்தவற்றை நான் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பாக அமையும் எனக் கூறினார்

அதன்படி அவர் இறக்கும் வரை 6 கோடி மாணவர்களை சந்தித்துள்ளார் என்றார். மேலும் அவர் கூறுகையில் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 450 க்கு மேல் மதிப்பெண் எடுத்திருந்தால் அவர்களுக்கு ஏபிஜே அப்துல் கலாம் பவுண்டேஷன் சார்பில் அவர்களுக்கு இலவசமாக நீட் மற்றும் ஜே இ இ பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

முன்னதாக பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் நந்தலாலா மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சொற்பொழிவாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here