சென்னை:

பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கான பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி அளவிலான முகவர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்காக அரசியல் கட்சி பிரதிநிதிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு அழைத்து பேசினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க.- துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை எம்.எல்.ஏ.

தி.மு.க. – வக்கீல் கிரி ராஜன்.

காங்கிரஸ்- தாமோதரன், பொன்.கிருஷ்ணமூர்த்தி.

பாரதிய ஜனதா- சவுந்தர ராஜன்.

தேசியவாத காங்கிரஸ்- சாரதி, அபுபக்கர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- ஆறுமுகநயினார், உதய குமார்.

இந்திய கம்யூனிஸ்டு- ஏழுமலை, பெரியசாமி.

பகுஜன் சமாஜ்- பாரதிதாசன், மாணிக்கராஜ்.

சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை அரசியல் கட்சியினரும் வழங்கலாம் என்றும் கூட்டத்தில் தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பல்வேறு கேள்விகளையும் தேர்தல் தொடர்பாக கேட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here