திருவாரூர், நவ. 28 –

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவரின் அலட்சியமான சிகிச்சையால் பிறந்த குழந்தை மூளை சாவு அடைந்தாக குழந்தையின் தாயரின் உறவினர்கள் குற்றச்சாட்டுவதால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளாங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மதன்குமார் ( 27) இவரது மனைவி வினோதினி (23 ) இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், வினோதினி கர்ப்பமாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில்  எடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் பரிசோதனை மேற்கொண்டு வந்துள்ளார். மேலும், கடந்த வாரம் சென்று பரிசோதித்த போது வினோதினியின் கால்களில் லேசான வீக்கம் இருந்ததாக கூறி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை செய்த போது  குழந்தையும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போதே குழந்தையின் துடிப்பு இல்லாதது போன்று உள்ளதாக வினோதினி பணியில் இருந்த பெண் மருத்துவரிடம் சென்று தெரிவித்து உள்ளார்.

உடனடியாக மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு குழந்தை நலமாக உள்ளதாகவே கூறி உள்ளார் . பின்னர் மதியம் 2 மணிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுப்பதற்காக அழைத்துச் சென்ற நிலையில் மாலை நாலு முப்பது மணி அளவில் குழந்தை நாடி துடிப்பு இல்லாமல் பிறந்துள்ளது எனக்கூறி  தீவிர சிகிச்சை பிரிவிற்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும், இன்று இரவு குழந்தை உடலின் நிறம் மாறிவிட்டதாகவும் குழந்தை மூளை சாவு அடைந்துள்ளதாகவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காலைக்குள் குழந்தை உயிர் இழக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர் .

தொடர்ந்து உறவினர்கள் தெரிவித்த போது, பணியில் இருந்த பெண் மருத்துவரிடம் காலையிலேயே குழந்தையின் துடிப்பு இல்லாதது போல் உள்ளது. என தெரிவித்த போதே அலட்சியம் இல்லாமல் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தால் குழந்தை ஆரோக்கியமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது எனவும், மருத்துவரின் அலட்சியமான சிகிச்சையின் காரணமாகவே குழந்தை மூளை சாவு அடைந்ததற்கான காரணம் என குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

 

 

பேட்டி :தமிழரசி உறவினர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here